நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்குவதற்கான முயற்சிகளின் பின்னணியில் சந்திரிகா

121 0

ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்காக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகளின் பின்னால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவே உள்ளார் என தெரியவருவதாக செய்தி வெளியிட்டுள்ள டெய்லிமிரர் எனினும்  தற்போயை நாடாளுமன்றத்திடமிருந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறமுடியாது என்;பதால்   இந்த முயற்சிகள் வெற்றியளிக்காது என தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க முன்னாள் சபாநாயகர் கருஜெயசூர்யவுடன் இணைந்து நிறைவேற்று அதிகார முறையை நீக்கி அதன் அதிகாரங்களை அமைச்சரவைக்கு வழங்கும் அரசமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு சில சிவில் சமூக அமைப்புகளின் தலைவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும் இது  அரசமைப்புமாற்றங்கள் என்ற போர்வையில் ஜனாதிபதி தேர்தலை பிற்போடு;ம் நடவடிக்கை என்ற பரந்துபட்ட கருத்து காணப்படுகின்றது.

1994இல் முதல்தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவேளை நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்குவேன் என சந்திரிகா குமாரதுங்க வாக்குறுதியளித்திருந்தார்.

இதன் பின்னர் பல தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளனர் எனினும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை தொடர்கின்றது.

முன்னாள ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச மைத்திரிபாலசிறிசேன ஆகியோரும் இந்த உறுதிமொழியை வழங்;கியிருந்தனர் .

இதேவேளை தேர்தல்காலத்தில் நிறைவேற்று அதிகாரஜனாதிபதிமுறையை நீக்கும் முயற்சியை  எதிர்ப்பதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

தேர்தலை பிற்போடுவதற்கான மற்றுமொரு ஏமாற்றுநடவடிக்கை இது ஜனாதிபதி தேர்தலில் வென்றால் நாங்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்குவோம்  அதேவேளை தற்போதைய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவது என்பது சாத்தியமற்ற விடயம் என ஜேவிபியின் விஜிதஹேரத் தெரிவித்துள்ளார் என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.