கடுவெல நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட இரண்டு குழுக்கள் நீதிமன்ற சிறைக்கூடத்திற்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான நிலை தோற்றம் பெற்றது.
இதனால் நீதிமன்றில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக அதன் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன.
3 பஸ்களில் சுமார் 150 சந்தேகநபர்கள் சிறைச்சாலையிலிருந்து கடுவெல நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டதாகவும் இதன்போதே அவர்களுக்குள் வாக்குவாதம் இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது சிறை அதிகாரிகள் பலர் சிறைக்கூடத்திற்குள் சென்று மோதலை தடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர், மதிய உணவுக்காக நீதிமன்றம் ஒத்திவைக்கப்படும் வரை, நீதிமன்றத்திற்கு வந்திருந்த வெளியாட்களை நீதிமன்றத்திலிருந்து வெளியேற்றி, சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதன்படி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் குழுவை விரைவாக சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல சிறைச்சாலை அதிகாரிகள் ஏற்பாடு செய்ததாகவும், மதிய உணவிற்குப் பிறகு, நீதிமன்ற நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

