தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் நுழைவுச்சீட்டு விற்பனையால் வருமானம் அதிகரிப்பு

214 0

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின்  கணக்கறிக்கைகளின் படி, நுழைவுச்சீட்டின் மூலம் பெறப்பட்ட வருமானமானது ஜனவரி மாதம் முதல் நாற்பது நாட்களில் ஐம்பத்து இரண்டு மில்லியனாக அதிகரித்துள்ளது.

தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து அறுபதாயிரம் என தெரியவந்துள்ளது.

2023 ஆம் ஆண்டு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியன் எனவும் அதன் வருமானம் 341 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் கல்விச் சுற்றுலா உள்ளிட்ட காரணங்களால் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மிருகக்காட்சிசாலை திணைக்களத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் எச்.ஏ.அனோமா பிரியதர்ஷனி தெரிவித்துள்ளார்.