கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலின் பேரில் சமூக சேவைகள் அமைச்சினால் மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுய தொழில் உபகரணங்கள் பொழுதுபோக்கிற்காக தொலைக்காட்சி பெட்டிகளும் (LED)செந்தில் தொண்டமானால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.மேலும், சாதனைகள் நிகழ்த்திய தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

