மண்மேட்டில் இருந்து வழுக்கி விழுந்து முதியவர் நேற்று (14) உயிரிழந்ததாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா மவுண்ட் மேரி வீதியை சேர்ந்த 71 வயதுடைய வெள்ளசாமி கருப்பையா என்பவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று புதன்கிழமை மழை பெய்துகொண்டிருந்த வேளையில் தனது விவசாய தோட்டத்துக்கு சென்று மீண்டும் வீடு திரும்பும்போது சுமார் 530 சென்றிமீட்டர் உயரம் கொண்ட மண்மேட்டில் இருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த முதியவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக இன்று வியாழக்கிழமை (15) நுவரெலியா மாவட்ட பொது ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

