கிரிமிய கடற்பரப்பில் உக்ரைன் ஆளில்லா விமான தாக்குதல் – ரஸ்யாவின் பாரிய கப்பல் மூழ்கடிப்பு

172 0

ரஸ்யா ஆக்கிரமித்துள்ள கிரிமியாவின் கடற்பரப்பில் உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலில் ரஸ்யாவின் பாரிய தரையிறங்கு கலமொன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக  பிபிசி தெரிவித்துள்ளது.

யலாட்டா நகரிற்கு தெற்கில் உள்ள பகுதியில் ரஸ்ய கப்பலை உக்ரைன் மூழ்கடித்துள்ளது – இந்த பகுதியில் பாரிய வெடிப்பு சத்தங்கள் கேட்டன என உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மகுராவி5 என்ற ஆளில்லா விமானங்கள்  சீசர் குனிக்கோவ் என்ற கப்பலை தாக்கியதை காண்பிக்கும் வீடியோவை உக்ரைன் வெளியிட்டுள்ளது.

கிரிமியாவில் உள்ள ரஸ்ய கப்பல்களை உக்ரைன் தொடர்ந்து தாக்கியழித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் குறிப்பிட்ட கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளமை குறித்து எந்த விபரத்தினையும் ரஸ்யா வெளியிடவில்லை