காதலர் தினத்தில் திருமண பந்தத்தில் இணைந்தார் அவுஸ்திரேலிய பிரதமர்

161 0

அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தனது நான்குவருடக கால தோழியுடன் திருமணபந்தத்தில் இணைந்துகொண்டுள்ளார்.

காதலர் தினத்தன்று  தனது நான்குவருடகால தோழிக்கு விசேடமாக வடிவமைக்கப்பட்ட மோதிரத்தை வழங்கி தான் அவரை திருமணம் செய்ய விரும்புவதை தெரிவித்துள்ளார்.

பதவியிலிருக்கும்போது திருமணபந்தத்தில் இணைந்துகொண்ட முதலாவது அவுஸ்திரேலியபிரதமர் அன்டனிஅல்பெனிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

அவள் ஆம் என தெரிவித்தால் என்ற பதிவுடன் இந்த விடயத்தை அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்வதுகுறித்து மிகவும் மகிழ்;ச்சியடைந்துள்ளோம் வாழ்க்கையின் ஏனைய பகுதி முழுவதும் ஒன்றாகயிருப்பது என தீர்மானித்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் ஒருவரையொருவர் சந்திக்க முடிந்ததால்நாங்கள் அதிஸ்டசாலிகள் எனவும் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

அல்பெனிசிற்கு 60 வயது அவருடைய வாழ்க்கை துணையான ஹெய்டனிற்கு 40 வயது என்து குறிப்பிடத்தக்கது.

இருவரும் நான்கு வருடங்களிற்கு முன்னர் சந்தித்தனர்.

அவுஸ்திரேலிய நாடாளுமன்ற சகாக்களும் நியுசிலாந்து பிரதமர் உட்பட பலரும் வாழ்த்தியுள்ளனர்.