மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!

20 0

மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பள்ளம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்  சிலாபம் பொலிஸில்  கடமையாற்றிய சதுன் மதுரங்க பண்டார (23)  என்ற பொலிஸ் கான்ஸ்டபிளாவார்.

ஆனமடுவ – சிலாபம்  வீதியில் பள்ளம  பிரதேசத்தில் கடந்த 10ஆம் திகதி அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக சிலாபம்  பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  அன்றைய தினம் மாலையே  உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் கான்ஸ்டபிள் தனது நண்பரைச் சந்திப்பதற்காக பள்ளம பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும்  சிலாபம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.