வீடொன்றிற்குள் புகுந்து கொள்ளையிட முயன்ற 3 பேரில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மினுவாங்கொடையில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (10) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மினுவாங்கொடை, யக்கொடமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் கொள்ளையிட முற்பட்ட 3 பேரில் ஒருவரே அடித்துக் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஏனைய இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.