வெடுக்குநாறிமலை – ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பகுதிக்குள் பாதணிகளுடன் நுழைந்த பௌத்த பிக்கு உள்ளிட்ட குழு

46 0

வவுனியா,வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு இன்று (11.02.2024) கொழும்பினை சேர்ந்த பெளத்த பிக்கு மற்றும் பெரும்பான்மையின மக்கள் உள்ளடங்கிய குழுவினர் விஜயம் செய்துள்ளனர்.

இவர்களுடன் தொல்பொருள் திணைக்களத்தினர் மற்றும் இராணுவத்தினரும் உடன் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குழுவினர் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தையும், அதன் சூழவுள்ள பகுதிகளையும் நீண்ட நேரம் பார்வையிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இவர்கள் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தின் அருகில் பாதணிகளுடன் நடமாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.