களுத்துறை – மொரொன்துடுவை பிரதேசத்தில் 16 வயது மாணவனை தாக்கி காயப்படுத்திய “கலபுகம மல்லியா ” என்ற நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரொன்துடுவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவரொருவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
சந்தேக நபரின் மகள் குறித்த மாணவனின் பாடசாலையில் கல்வி கற்று வரும் நிலையில் சந்தேக நபரின் மகளும் குறித்த மாணவனும் காதல் தொடர்பை பேணியுள்ளனர்.
இது தொடர்பில் அறிந்து கொண்ட சந்தேக நபர், குறித்த மாணவன் பாடசாலை முடிவடைந்து வீடு சென்று கொண்டிருந்தபோது மாணவனைத் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த மாணவனின் கை , கால் மற்றும் முதுகுப் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

