“தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர்” காசிப்பிள்ளை கணேசலிங்கம் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு! 05.02.2024

423 0

சுவிசில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட
“தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர்” காசிப்பிள்ளை கணேசலிங்கம் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் செயற்பாட்டாளரும், தமிழீழ விடுதலைக்கான அவசரகால வேலைத்திட்டங்களின் போதும் தனது அயராத உழைப்பினையும், பங்களிப்பினையும் வழங்கியவருமான வோ மாநிலச் செயற்பாட்டாளர் காசிப்பிள்ளை கணேசலிங்கம் (கணேசண்ணை) அவர்களின் இறுதி வணக்க நிகழ்வானது 05.02.2024 திங்கள் அன்று நடைபெற்றது. தாயகப்பற்றும் இனப்பற்றும் மொழிப்பற்றும் கொண்டு தமிழீழத் தேசியத்தலைவரின் வழிநின்று,
2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் நாம் பல சவால்களை எதிர்கொண்டிருந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் வோ மாநிலச் செயற்பாட்டாளராக இணைந்து தமிழின உணர்வுடன் எம்மோடு உழைத்தவர்.

அமைதி, பொறுமை, தன்னொழுக்கத்தோடு வாழ்ந்த கணேசண்ணை, அனைவருடனும் அன்போடும் பண்போடும் தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை பணியாற்றியவர். தமிழீழ விடுதலைக்காகத் தேசியப் பற்றுடன் பணியாற்றிய காசிப்பிள்ளை கணேசலிங்கம் அவர்கள் தமிழீழ வரலாற்றிலும், எமது மனங்களிலும் கலந்திருப்பார்.

தமிழீழ விடுதலைப் புலிகள்- சுவிஸ் கிளை.