இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மூன்றாம் தரப்பினரின் தலையீடு தேவையில்லை என வெளியுறவு கொள்கை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மூன்றாம் தரப்பினரின் தலையீடு தேவையில்லை என வெளியுறவு கொள்கை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே நேற்று பத்திரிகையளர்களை சந்திக்கும் போது ,”இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதட்டம் குறித்து இந்த நிர்வாகம் (டிரம்ப்) கவலை தெரிவித்துள்ளது. எந்த பிரச்சினையும் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்தி பதட்டத்தை தணிக்க வேண்டும் என்றும் விரும்புகிறது. பேச்சுவார்த்தையில் (டிரம்ப்) நிர்வாகம் பங்கேற்கும் என்றும், பேச்சுவார்த்தையில் தனது இடத்தை விரைவில் முடிவு செய்யும் என்றும் எதிர்பார்க்கிறேன். அமைதி பேச்சுவார்த்தையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என நினைக்கிறேன். அதிபர் பங்கேற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மூன்றாம் தரப்பினரின் தலையீடு தேவையில்லை என வெளியுறவு கொள்கை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 2009 முதல் 2011 வரை அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பணியாற்றிய மீரா ஷங்கர் ,”இந்தியா, பாகிஸ்தான் இடையே மஸ்தியஸ்தம் செய்ய அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளது அந்நாட்டின் கொள்கை முடிவு போல தெரியவில்லை. நிருபர்களின் கேள்விகளுக்கு மட்டுமே நிக்கி ஹாலே பதிலளித்துள்ளார். அமெரிக்காவை இந்த மஸ்தியஸ்தர் பொறுப்பில் பார்க்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
அதே போல, பாகிஸ்தானுக்கான முன்னாள் இந்திய தூதர் பார்த்தசாரதி ,” கார்கில் போரின் போதும் இதே போல அமெரிக்கா தலையிட்டது. ஆனால், அது எந்த விதத்திலும் உதவவில்லை. எனவே, இரு நாடுகளுக்கிடையேயான் பிரச்சனையை இரு நாடுகளுமே பேசி தீர்த்துக் கொள்ளலாம்” என கூறியுள்ளார்.

