தனியார் பஸ் ஒன்றில் பயணித்த மாணிக்க கல் வர்த்தகர் ஒருவர் பஸ்ஸில் விட்டுச்சென்ற 2,500,000 ரூபா பெறுமதியான 13 மாணிக்க கற்கள் அடங்கிய பொதியை திருடிய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 42 வயதுடைய பஸ் சாரதியாவார்.
மாணிக்க கல் வர்த்தகர் ஒருவர் 13 மாணிக்க கற்கள் அடங்கிய பொதியுடன் தனது வர்த்தக நடவடிக்கை தொடர்பில் தனியார் பஸ் ஒன்றினூடாக அவிசாவளையை நோக்கி பயணித்த நிலையில் குறித்த வர்த்தகர் தனது பொதியை பஸ்ஸிலேயே விட்டுச்சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு வழங்கியதையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது வர்த்தகர் பயணித்த தனியார் பஸ்ஸானது அவிசாவளை, மாதொல பிரதேசத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் பஸ் சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் மாணிக்க கற்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

