மொரகல்ல கடலில் மூழ்கி ருமேனிய பிரஜை பலி!

147 0

மொரகல்ல கடலில் நீராடிய 71 வயதான ருமேனிய பிரஜை ஒருவர் மூழ்கி இன்று புதன்கிழமை (7) உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் 71 வயதுடைய ருமேனிய பிரஜையாவார்.

இவர் மொரகல்ல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் குறித்த ஹோட்டலுக்கு அருகில் உள்ள கடலில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து இவரை பேருவளை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் இவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இவரது சடலம் பேருவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மரண விசாரணைக்காக களுத்துறை – நாகொடை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.