பாலியல் துஷ்பிரயோகம் ; குற்றம்சாட்டப்பட்ட “பொட்டி” நீதிமன்றத்தினால் விடுதலை!

137 0

இளம் வயது தாய் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட “பொட்டி” என்ற நபர் ஒருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரினால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவர் இளம் வயது தாய் ஒருவரிடம் அவரை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவதாக கூறி தனது முச்சக்கரவண்டியில் ஏற்றி வனப்பகுதிக்கு அழைத்துச்சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட  இவர் கடந்த 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இவருக்கு  8 வருட கால சிறைத்தண்டனையும் 5,000 ரூபா அபராதமும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 150,000 ரூபா நஷ்டஈடும் செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த பாலியல் துஷ்பிரயோகமானது பாதிக்கப்பட்ட பெண்ணின் விருப்பம் இன்றி இடம்பெற முடியாது என கைது செய்யப்பட்டவர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.