பெலியத்தயில் ஐவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேக நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சட்டத்தரணியொருவர் மூலம் பெலியத்த பொலிஸில் சரணடைந்த நிலையிலேயே குறித்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை (6) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் அக்குரஸ்ஸ இம்புல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை கம்புறுபிட்டிய பிரதேசத்தில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் மறைத்து வைத்து பின்னர் கம்புறுபிட்டியவில் இருந்து காலி, கராப்பிட்டிய பிரதேசத்திற்கு குறித்த துப்பாக்கிகளை எடுத்துச் செல்வதற்கு உதவிய சந்தேக நபரே இவ்வாறு சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பெலியத்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் இன்று புதன்கிழமை (7) தங்காலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பெலியத்தயில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

