200 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சொகுசு கார்களை உடனடியாக கைப்பற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு!

44 0

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்பில் உள்ள தரவுகளை அழித்து, சாதாரண கார்களாக பதிவு செய்து சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 200 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சொகுசு வாகனங்களை உடனடியாக  கைப்பற்றி அரசுடைமையாக்குமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் செவ்வாய்க்கிழமை (06) இந்த உத்தரவை இலஞ்ச ஊழல்கள் விசாரணை ஆணைக் குழுவுக்கு பிறப்பித்துள்ளார்.

குறித்த இரண்டு சொகுசு வாகனங்களும் 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு, இரண்டு சாதாரண கார்களாக அவற்றைப்  பதிவு செய்து , சொகுசு  வாகன இறக்குமதிக்காக  அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய  வரி  இவற்றுக்குச் செலுத்தப்படாமை தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்துக்கு  அறிவித்ததையடுத்து நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.