சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழீழத்தின் கரிநாளாகும்-பெல்சியம்.

77 0

சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழீழத்தின் கரிநாளாகும்
04.02.2024
பெல்சியம்.

இன்று தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற புதிய போராட்ட களம் பிரித்தானியாவில் தொடக்கிவைக்கப்பட்டுள்ளது. அதே சமநேரத்தில் பெல்சியம் தலைநகர் புரூசலில் அமைந்துள்ள பிரித்தானியத் தூதரகம் முன்பாக கரிநாள் கவனயீர்ப்பு போராட்டம் மக்கள் எழுச்சியோடு நடைபெற்றது.
1976 மே 14 அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியின் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ,தனித்தமிழீழம் என்ற
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் இழந்து விட்ட எங்கள் தன்னாட்சிக்கான உரிமைகளை மீண்டும் பிரித்தானிய மன்னரிடமும், அரசிடமும் கேட்டு நிக்கின்றோம். நாங்கள் ஈழத்தின் இறையாண்மையுள்ள மூத்த தமிழ்க்குடிகள் .இனத்தாலும்,மொழியாலும் ,மதத்தாலும்,கலாச்சார பழக்கவழக்கங்களினாலும் தனித்தன்மையுடன் வாழ்ந்தவர்கள் .
போர்த்துக்கீசர் ,ஒல்லாந்தர் ,ஆங்கிலேயர் ஆகியோரால் ஈழம் ஆக்கிரமிக்கப்பட்ட போது ஈழத்தீவில் இருதேசங்கள் இருந்தது.தமிழர் தேசம் தனியான இறைமையோடு ஆளப்பட்டுக்கொண்டிருந்தது.ஆக்கிரமிப்பின் பின்னர் இறுதியாக பிரித்தானியர்(ஆங்கிலேயர்) 02.04.1948 சிங்கள ஆட்சியாளர்களிடம் ஆட்சி அதிகாரங்களை ஒப்படைத்து விட்டு ஒரே ஆட்சியாக அறிவித்துச் சென்றார்கள் .
அன்றிலிருந்து எமது சுயநிர்ணய உரிமைகள்,மற்றும் தன்னாட்சி அதிகாரங்கள் பறிக்கப்பட்டன.சொந்த நாட்டுக்குள்ளேஅகதிகள்ஆக்கப்பட்டோம் . எமது மண் பறிக்கப்பட்டது. மொழி, பண்பாடு,கலை,தாயகம்,தேசியம் ,தன்னாட்சி உரிமைகள் மறுக்கப்பட்டு, தொடர் இனவழிப்புப் போரை திட்டமிட்ட வகையில் முன்னெடுத்து வருகிறது.2009இல் மாபெரும் இனப்படுகொலையை அரங்கேற்றியது.இவ்வாறான ஒரு இனவழிப்பை சுமந்த இனமாக நாம் வாழ்ந்து வருகிறோம்.
சிறிலங்கா அரசு நடாத்திய இனவழிப்பிற்கு இன்றுவரை அனைத்துலக விசாரணை நடாத்தப்படவில்லை.நீதிவேண்டி தொடர்ந்தும் போராடிவருகிறோம்.
எனவே இழந்துவிட்ட தன்னாட்சி உரிமைகளை மீண்டும் பிரித்தானிய அரசிடமும் , மன்னரிடமும் உரிமையுடன் கேட்கிறோம் .

தியாகதீபம் திலீபன் அண்ணா அன்று கூறியது போல் மக்கள் புரட்சி வெடிக்க தொடங்கிவிட்டது ,இன்றைய இளையோர்கள் விழிப்படைந்து விட்டார்கள் நிச்சயம் எமக்கான தாயகவிடுதலை கிட்டும் என்ற நம்பிக்கையோடு இந்த கரிநாள் நிகழ்வானது நடைபெற்று இறுதியில் பிரித்தானியா தூதரகத்திடம் எங்கள் கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டது.
மேற்ப்படி நிகழ்வானது 13.00 மணிக்கு ஆரம்பமாகி Avenue d Auderghem 10 1040 Brussels Belgium என்னும் இடத்தில் சிறப்பான முறையில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி அகவணக்கத்துடன் ஆரம்பமாகி மக்கள் எழுச்சிப் போராட்டமாக கரிநாள் போராட்டம் நடைபெற்று, 14.30 மணிக்கு எமது தாரகமந்திரத்துடன் நிறைவு பெற்றது.