பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இலங்கையில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ள நிலையில், அதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று திங்கட்கிழமை (05) இடம்பெறவுள்ளது.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் மாலை 06.00 மணிக்கு கொழும்பு தாமரைக் கோபுரத்தில் உள்ள மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், யுவன் சங்கர் ராஜாவை காணாவிரும்பும் ரசிகர்கள் இன்று மாலை 5 மணிக்கு கொழும்பு தாமரைக் கோபுர முன்றலிற்கு வருகை தருமாறு ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.





