கடந்த தேர்தலில் மூன்றுவீதம் பெற்ற கட்சி இம்முறை ஐம்பது வீதம் பெறும் கனவுடன்

119 0

உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளியின் நிலையில் உள்ள நாட்டிற்கு ரணில்விக்கிரமசிங்கவே சிறந்த மருத்துவர் என அமைச்சர் ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி தேர்தல் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடைபெறவேண்டும் என தெரிவித்துள்ள அமைச்சர் 14ம் திகதிக்குள் புதிய ஜனாதிபதி பதவியேற்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ரணில்விக்கிரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார் என கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை தேர்தலில் மூன்றுவீதம் மாத்திரம் பெற்ற கட்சி இம்முறை மேலும் 47 வீதம் பெறவேண்டும் இது ஒருகனவு எனவும் தெரிவித்துள்ள ஹரீன்பெர்ணான்டோ அவர்கள் அந்த கனவில் திளைத்திருப்பதற்கு அனுமதிப்பது சிறந்த விடயம் ஆனால் கனவுகள் ஒருபோதும் நிஜமாவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வங்குரோத்து நிலையில் காணப்பட்ட தேசத்திற்கு குறுகிய காலத்தில் உயிர்கொடுத்தவர் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க என்பதால் தேசத்தை கட்டியெழுப்புவதற்கு அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கவேண்டும் எனவும் ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

எங்கள் நாடு தீவிரகிசிச்சை பிரிவிலிருந்து வோட்டிற்கு அனுப்பப்பட்ட நோயாளியின் நிலையில் காணப்படுகின்றது மீண்டும் நோயாளியை தீவிரகிசிச்சை பிரிவிற்கு அனுப்பிகொலை செய்யப்போகின்றார்களா என்பதை மக்களே தீர்மானிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளியின் நிலையில் உள்ள நாட்டிற்கு ரணில்விக்கிரமசிங்கவே சிறந்த மருத்துவர் என தெரிவித்துள்ள ஹரீன் பெர்ணான்டோ முழு உலகமும் இதனை ஏற்றுக்கொள்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.