பௌஸிக்கு எதிரான வழக்கு விசாரணை 29 இல்!

133 0

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸிக்கு எதிரான  வழக்கு விசாரணை எதிர்வரும் 29 ஆம் திகதி  எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸி அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக கடமையாற்றிய காலத்தில்  நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாகனம் ஒன்றை தனது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தி அரசாங்கத்துக்கு 10 இலட்சம் ரூபா இழப்பை ஏற்படுத்தியமை   தொடர்பிலேயே அவருக்கு எதிராக தொடரப்பட்ட  வழக்கை எதிர்வரும் 29ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி சவேந்திர பெர்னாண்டோ முன்னிலையில் இன்று (05) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.