கார் விபத்தில் பெண் உயிரிழப்பு!

130 0

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மூன்று வயது மகள் ஆகியோர் பயணித்த கார் பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானதில்  தாய் உயிரிழந்ததாக  ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம, ரைகம  பகுதியைச் சேர்ந்த  40 வயதுடைய தாயே விபத்தில்  உயிரிழந்துள்ளார் .

இவர்கள் மூவரும் காரில் ஹொரணை பகுதிக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.