தாய்லாந்து பிரதமர் உள்ளிட்ட குழுவினரை வரவேற்றார் ஜனாதிபதி ரணில் !

123 0

இலங்கை வந்துள்ள தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் மற்றும் அவரது குழுவினரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றார்.

தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை (3) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று நாட்டுக்கு வருகைதந்துள்ள அவர், இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக பங்கேற்கின்றார்.

தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin) அந்நாட்டு பிரதி பிரதமர் பூம்தாம் வெச்சயச்சாய் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினருடன் வருகை தந்துள்ள நிலையில், அவர்களுக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன சிறப்பு வரவேற்பளித்தார்.

இதேவேளை, இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்விலும் தாய்லாந்து பிரதமர் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.