நாரம்மல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சப் – இன்ஸ்பெக்டர் இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 18ஆம் திகதி சந்தேக நபரான சப் – இன்ஸ்பெக்டர், லொறிச் சாரதி ஒருவரைச் சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவத்தில் 40 வயதுடைய சாரதியே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

