ஜோர்தானில் அமெரிக்க இராணுவதளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிற்கு பதில் தாக்குதலை மேற்கொள்வதற்கான அனுமதியை அமெரிக்கா தனது இராணுவத்திற்கு வழங்கியுள்ளது.
ஈராக் சிரியாவில் உள்ள ஈரான்நிலைகளின் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு அமெரிக்க இராணுவத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்கள் தொடர்ச்சியாக பல நாட்களிற்கு இடம்பெறும் காலநிலையை அடிப்படையாக வைத்தே தாக்குதல்களை எப்போது மேற்கொள்வது என்பது தீர்மானிக்கப்படும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜோர்தான் தளத்தின் மீது தாக்குதலை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானம் ஈரானில் தயாரிக்கப்பட்டது என அமெரிக்க புலனாய்வு தரப்பினர் காணப்படுகின்றனர்-உக்ரைனிற்கு எதிரான தாக்குதலிற்காக ரஸ்யாவிற்கு வழங்கப்பட்ட ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்கள் போல இவை காணப்படுகின்றன எனவும் புலனாய்வு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் எப்போது இடம்பெறலாம் என்ற விபரத்தை வெளியிடாத அமெரிக்க அதிகாரிகள் மோசமான காலநிலையிலும் எங்களால் தாக்குதலை மேற்கொள்ள முடியும் ஆனால் எனினும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக துல்லியமாக இலக்குகள் தெரியும் சூழ்நிலையில் தாக்குதலை மேற்கொள்ள விரும்புகின்றோம் என தெரிவித்துள்ளனர்.

