தாமரைக் கோபுரத்தை பார்வையிட இதுவரை 50 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை !

137 0

கொழும்பு தாமரைக் கோபுரம் பொதுமக்கள் பாவனைக்காக கையளிப்பட்டதிலிருந்து இன்று வரையான காலப்பகுதியில் 50 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்துள்ளதாக தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தாமரைக் கோபுரத்திற்கு விஜயம் செய்த 50 ஆயிரம் ஆவது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு நிர்வாகத்தினரால் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு தாமரைக் கோபுரம் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.