போதைப்பொருள் கடத்தல்காரரான ருவன் சமில பிரசன்ன என்றழைக்கப்படும் தெமட்டகொடை ருவன் என்பவரின் மனைவி, மகன் மற்றும் சகோதரியை. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
போதைப்பொருள் கட்த்தல், விற்பனை மற்றும் பிற சட்டவிரோத வழிகளில் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 100 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் இவர்களின் பெயர்களில் இருப்பது விசாரணைகளில் தெரிய வந்ததையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டனர்
தரிந்து மதுசங்க என அடையாளம் காணப்பட்ட தெமட்டகொட ருவனின் 27 வயது மகன், முன்னணி அரசியல் கட்சி ஒன்றின் குப்பியாவத்தை தொகுதி அமைப்பாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (01) அளுத்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

