ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வருகை

218 0

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிராந்திய அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று நாட்டிற்கு வருகைதந்துள்ளது.

நாட்டில் நடைபெறவுள்ள  ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டின் (APRC) 37 ஆவது அமர்வின்  முன்னாயத்த  நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்காக  குறித்த குழு வருகைதந்துள்ளது.

குறித்த மாநாடு பெப்ரவரி 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிராந்திய அலுவலகத்தின் பிரதிநிதிகள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 46 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு உணவு மற்றும் விவசாயம் தொடர்பான சவால்கள் மற்றும் முன்னுரிமைகள் குறித்து விவாதிப்பதும் பிராந்திய ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதுமே ஆசிய பசிபிக் பிராந்திய மாநாட்டின் பிரதான நோக்கமாகும்.

மேலும், பிராந்தியத்தில் உணவு மற்றும் விவசாயத்தின் நிலை, விவசாய உணவு அமைப்புகள் மாற்றம், மற்றும் குறிப்பாக சிறு விவசாயிகள் மற்றும் குடும்ப விவசாயிகளுக்கான தீர்வுகள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.