ஆர்ப்பாட்டத்தின்போது செய்தி சேகரித்த டெய்லி மிரரின் செய்தி ஆசிரியர் யோஹான் பெரேரா காயமடைந்தார்!

158 0

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (30)  இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட  கண்ணீர் புகை பிரயோகத்தின் விளைவாக  ஏற்பட்ட நிலைமைகளின்போது டெய்லி மிரர் பத்திரிகையின் செய்தி ஆசிரியரான யோஹான் பெரேரா  காயமடைந்தார்.

ஆர்ப்பாட்டம்  விகாரமாதேவி பூங்காவிற்கு முன்பாக இடம்பெற்றதுடன், நீதிமன்ற உத்தரவின் பேரில் பொலிஸார் வீதியை மறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தமக்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளை மீறுவதைக் கட்டுப்படுத்தினர்.

யோஹான் பெரேரா இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.