நேற்று செவ்வாய்க்கிழமை (30) அரசாங்கத்துக்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியின்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கொண்ட கல் வீச்சு காரணமாக மூன்று பொலிஸ் சார்ஜன்ட்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கொள்ளுப்பிட்டி, கொழும்பு மாநகர போக்குவரத்து பிரிவு மற்றும் எஹலியகொட ஆகிய இடங்களில் பணிபுரியும் மூன்று சார்ஜன்ட்களே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கொழும்பு விகாரமதேவ பூங்காவுக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் மீது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகைப் பிரயோகங்களை மேற்கொண்டபோதே பொலிஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

