பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிரான மனு மீதான விசாரணைகள்!

135 0

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு  எதிராகத் தாக்கல்  செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று (30) மூன்றாவது நாளாகவும் உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, மற்றும் நீதிபதிகளான விஜித் மலல்கொட, ஏ. ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய ஐவர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணை இடம்பெற்றது.

இதன்போது  மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் தொடர்ந்து  தமது வாதங்களை  முன்வைத்தனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானது எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இதுவரை 31 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.