புத்தளம் பிரதேசத்தில் 20 கிலோ காட்டு பன்றி இறைச்சியுடன் உணவகம் ஒன்றின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் புத்தளம் , மதுரங்குளி பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவராவார்.
இலங்கை விமானப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் சந்தேக நபரிடத்திலிருந்து 20 கிலோ நிறையுடைய காட்டு பன்றி இறைச்சி மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் தனது உணவகத்திற்கு மதுபானம் அருந்த வருபவர்களுக்காக காட்டு பன்றி இறைச்சி மற்றும் ஏனைய காட்டு விலங்குகளின் இறைச்சிகளை மறைத்து வைத்து பரிமாறி வந்துள்ளதாக விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

