இந்திய புலமைப்பரிசில் திட்டத்தில் மருத்துவம், சட்ட கற்கை நெறிகள் உள்ளடக்கப்படவில்லை

45 0

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இலங்கைப் பிரஜைகளுக்கான முழு நிதியுதவியுடன் கூடிய சுமார் 200 புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. கடந்த வாரம் இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் குறித்த புலமைப்பரிசில் திட்டங்களில் மருத்துவம், சட்டத்துறை, துணை மருத்துவம் (Paramedical), ஆடை வடிவமைப்பு (Fashion Design) ஆகிய கற்கை நெறிகள் உள்ளடக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினைத் தொடர்வதற்காக இந்த புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய 2024 – 2025 காலப்பகுதியில் பொறியியல், அறிவியல், வணிகம், பொருளாதாரம், வர்த்தகம், மனிதநேயம் மற்றும் கலை போன்ற பாடநெறிகளுக்கு நேரு நினைவு உதவித்தொகை திட்டத்தின் மூலமும், பொறியியல், அறிவியல் மற்றும் வேளாண்மைக்கு முன்னுரிமை அளிக்கும் முதுகலை பட்டப் படிப்புகளுக்கு மௌலானா ஆசாத் திட்டத்தின் ஊடாகவும் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.