மகனின் வேட்டையில் தந்தை பரிதாபமாக பலி

44 0

கேகாலை தெடிகம பிரதேசத்தில் மகனொருவர் வன விலங்கை வேட்டையாடும் நோக்கில் பிரயோகித்த துப்பாக்கி சூட்டில் தந்தை உயிரிழந்துள்ளார்.

47 வயதுடைய தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தின் போது குறித்த பிரதேசத்தில் உள்ள மலைப்பகுதிக்கு தந்தையும் மகனும் வன விலங்குகளை வேட்டையாட சென்றுள்ளனர்.

இந்நிலையில் மகனால் வன விலங்குகளை நோக்கி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து உயிரிழந்தவரது  17 வயது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெடிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.