இராணுவ சிப்பாய் ஹொரணையில் சடலமாக மீட்பு

35 0

களுத்துறை – ஹொரணை பகுதியில் உள்ள சிறிய குளத்திலிருந்து இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (29) அங்குருவத்தோட்ட பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

அத்திலிவெவ பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இராணுவ சிப்பாய் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28)  உடற் பயிற்சியின் போது கலந்து கொள்ளவில்லை எனவும் தேடப்பட்ட போதும் அவர் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர் .

இந்த விடயம்  தொடர்பில் இராணுவ சிப்பாயின் வீட்டாருக்கு  அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது .