எவர் கட்டுப்பாடு விதித்தாலும் நாளைவீதியில் இறங்குவோம்

24 0

அனைத்துகட்டுப்பாடுகளையும் மீறி  நாளை வீதியில் இறங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நாளை வீதியில் இறங்கி தற்போதைய அரசாங்கத்தை அகற்றுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுசெயலாளர் ரஞ்சித்மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபரும் வேறு எவரும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் ஆனால் அனைத்து சட்டங்களையும் மீறி நாளை கொழும்பிற்கு 50,000 பேரைகொண்டுவருவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

2022 ம் ஆண்டு நாங்களே மக்களின் எழுச்சியை ஆரம்பித்துவைத்தோம் இம்முறையும் அதனை செய்ய எண்ணியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எங்கிருந்து பேரணியாக செல்வோம் என்பதை தற்போதைக்கு நாங்கள் அறிவிக்கமாட்டோம் நாளையே அறிவிப்போம் என ரஞ்சித்மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.