பொரலஸ்கமுவ பிரதேசத்தில் உள்ள வீடமைப்புத் தொகுதி ஒன்றில் வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வீடு ஒன்றிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த படோவிட்ட ஆஷா என்ற பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிரடிப்படையின் இன்ஸ்பெக்டர் ஜனித குமாரவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

