ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் சென்ற பஸ் விபத்து

134 0

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற பஸ் வேக கட்டுப்பாட்டை இழந்த மின்கம்பத்தை சேதப்படுத்திய பின்  கால்வாயில் பாய்ந்து  விபத்துக்குள்ளாகியுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டாவளை பகுதியில் நேற்று சனிக்கிழமை (27) குறித்த விபத்து  இடம்பெற்றுள்ளது.

குறித்த தனியார்  பஸ்  ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களை   ஏற்றியவாறு பயணித்துள்ள நிலையில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பத்தினை உடைத்துக் கொண்டு கால்வாயில் பாய்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

இந்த விபத்தில் எவருக்கும் எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .