வயோதிப பெண் பாலியல் வன்கொடுமைக்கு பின் மரணம்

43 0

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 74 வயது மூதாட்டியின் பிரேதப் பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது.

இந்த சம்பவம் காலி – கரந்தெனிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

வீடொன்றில் தனியாக வசித்து வந்த குறித்த 74 வயதுடைய மூதாட்டி, அண்மையில் தனது வீட்டில் மயங்கி விழுந்த நிலையில் அயலவர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 04 நாட்களுக்குப் பிறகு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அங்கு நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.