ஹோட்டலில் பணி புரியும் பெண் ஊழியரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய இருவர் கைது

42 0

தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பணி புரியும் பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய ஹோட்டல் கணக்காளர் மற்றும் மனித வள முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் அநுராதபுரம், மஹாவிலச்சிய பிரதேசத்தை சேர்ந்த பெண்ணாவார்.

குறித்த தனியார் ஹோட்டலில் பணியாற்றி வரும் இந்த பெண் ஊழியரின் சேவைக் கட்டணத்தை 75 வீதமாக வழங்குவதற்காகவும் சேவையை நிரந்தரமாக்குவதற்கும் ஹோட்டல் கணக்காளர் மற்றும் மனித வள முகாமையாளர் ஆகியோர் இப்பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரியுள்ளனர்.

அதனையடுத்து, சந்தேக நபர்கள் இந்த பெண்ணை ஹோட்டல் அறையொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர்.

அதன் பின்னர், பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பில் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே சந்தேக நபர்கள் ஹபரனை பிரதேசத்தில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.