சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சாலில் செட்டி, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்..(காணொளி)

271 0

மன்னாரில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் நடாத்தும் முள்ளிக்குளம் மக்களை, சர்வதேச மன்னிப்புச் சபையின் விசேட குழுவினர் சந்தித்துள்ளனர்.

 

இதன்போது நிலைமைகளை நேரில் அவதானித்ததுடன், மக்களின் பிரச்சனைகளையும் விளக்கங்களையும் கேட்டறிந்துகொண்ட சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சாலில் செட்டி, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்…..

–இராணுவ முகாமுக்கு முன்னால் காணி மீட்புக்கு மக்கள் முற்றுகைப்போராட்டம் நடத்துவதாக அறிந்து இங்கு வந்திருக்கிறோம்.

நேரடியாக நிலைமைகளை ஆராய்துள்ளோம்.

இன்றைய சூழ்நிலையில் இலங்கை என்று சொன்னால் உலகநாடுகளுக்கு தெரிந்துள்ளது.

2009ஆம் ஆண்டு உள்நாட்டுப்போர் முடிவடைந்துள்ள நிலையில், கிட்டத்தட்ட 10 வருடங்கங்களை நெருங்கும் வேளையில், மக்களின் பிச்சனைகள் தீர்க்கப்படவில்லை.

மீள்குடியேற்றம் உட்பட காணி தொடர்பான பிரச்சனைகள் அரசாங்கத்தால் தீர்க்கப்படவில்லை.

முள்ளிக்குளம் மக்கள் இரண்டு மூன்று தடவைகள் இடம்பெயர்ந்த நிலையில் மீள்குடியேறியுள்ளனர்.

ஆகவே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதை வலியுறுத்தவே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்.

சர்வதேசத்திடம் இலங்கை வாக்குறுதியளித்துள்ள நிலையில் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கப்படவேண்டும்.

இலங்கை அரசு காலம் தாழ்த்தக் கூடாது.

புதிய அரசு பதவியேற்று இரண்டு வருடகாலம் முடிந்துவிட்ட நிலையில், இந்தப் பிரச்சினைகளுக்கு புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையின் பிரதமர் உட்பட பல அரச தலைவர்களை நாங்கள் சந்திக்கவுள்ளோம்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாகவும் அவர்களின் நீதிக்காகவும் அரசிடம் வலியுறுத்துவோம்.