முள்ளிக்குளம் மக்களை, சர்வதேச மன்னிப்புச் சபையின் விசேட குழுவினர் சந்தித்துள்ளனர்(காணொளி)

270 0

மன்னாரில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் நடாத்தும் முள்ளிக்குளம் மக்களை, சர்வதேச மன்னிப்புச் சபையின் விசேட குழுவினர் சந்தித்துள்ளனர்.

மன்னார் முள்ளிக்குளம் பிரதேசத்தில் தமது காணிகளை வடுவிக்குமாறு கோரி, அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும்நிலையில், குறித்த மக்களை, சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சாலில் செட்டி தலைமையிலான குழுவினர் சந்தித்துள்ளனர்.

முள்ளிக்குளம் மக்கள் போராட்டம் நடாத்தும் இடத்திற்கு சென்று, சர்வதேச மன்னிப்புச் சபையின் விசேட குழுவினர் நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

முள்ளிக்குளத்தில் 700 ஏக்கர் நிலப்பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாம், முள்ளிக்குளம் மக்களின் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளதால் தங்களின் காணிகளை கடற்படையினர் விடுவிக்க வேண்டும் எனக்கோரி, கடந்த 12 நாட்களாக முள்ளிக்குளம் கடற்படை முகாமிற்கு முன்னால் கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்நிலையிலேயே சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட குழுவினர், முள்ளிக்குளத்தில் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தனர்.

இச்சந்திப்பில், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவஜிலிங்கம், கிறிஸ்தவ மத குருமார் என பலரும் பங்கு கொண்டிருந்தனர்.