இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசனின் பெயரை நான் முன்மொழிந்துள்ளேன் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மேலும், சிறீநேசன் பொதுச் செயலாளராக வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றது என்று நாங்கள் அறிகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊடக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சி பாரிய வரலாற்றினை கொண்ட கட்சி என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமி்ழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மட்டக்களப்புக்கு தரப்பட வேண்டும் என்று நாங்கள் ஒரு முன்மொழிவினை வைக்கும் போது மட்டக்களப்பில் இருந்து பொதுச் செயலாளர் பதவிக்கு மற்றுமொரு பிரேரணை முன்வைக்கப்படக் கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

