ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஐ.நா.வின் பெண்கள் அமைப்பும் மற்றும் கிறிசாலிஸ் நிறுவனனும் இணைந்து நாட்டில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டபெண்கள் தலைமையிலான 600 சிறு மற்றும் நடுத்தர தொழிவல் நிறுவனங்களுக்கு வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு 110 மில்லியன் ரூபா மதிப்புள்ள உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
‘நெருக்கடியில் உள்ள பெண்களுக்கு அதிகாரமளித்தல்’ என்ற நோக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு பெப்ரவரியில் ஆரம்பிக்கப்பட்ட ஒருவருட திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பெண்கள், சிறுவர்கள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் ஒத்துழைப்புடன் ஐ.நா. பெண்கள் அமைப்பு மற்றும் கிறிசாலிஸ் நிறுவனமும் இணைந்து இலங்கையில் சமூகப் பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளனர்.
இது தொடர்பான நிகழ்வொன்று அண்மையில் பத்தரமுல்லையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இங்கைக்கான ஜப்பான் தூதுவர் MIZUKOSHI Hideaki கூறுகையில்,
“இலங்கையில் 5 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த மகத்தான முயற்சிக்கு ஜப்பான் தூதரகம் ஆதரவளிப்பதில் மகிழ்ச்சி அடைவதோடு, பெண்களின் பொருளாதாரத்திற்கு ஆதரவாக ஐ.நா. பெண்கள் அமைப்புடன் இணைந்து இந்த கூட்டுறவை தொடர நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான ஐ.நா.வின் மகளிர் பிராந்திய அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளர் சாரா நிப்ஸ்,
“ஜப்பான் அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 600 பெண்கள் தலைமையிலான நுண் நிறுவனங்களுக்கு வர்த்தகம் தொடர்பான மேம்பட்ட பயிற்சிகளை வழங்கியுள்ளோம். டிஜிட்டல் கருவிகள் மற்றும் வளங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அவர்களின் தயாரிப்புகளை சிறந்த முறையில் சந்தைப்படுத்த முடியும்.
“ஐ.நா. பெண்களுக்கான பயிற்சியில் பங்கேற்றமை எனக்கு சிறந்த சாத்தியக்கூறுகளை உருவாக்கியது. சமூக ஊடக தளங்கள் மற்றும் இணைய வணிகச் செயல்பாடுகளுக்கான அவற்றின் திறனைப் பற்றி நான் கற்றுக்கொண்டேன். எனது குழந்தைகளின் உதவியுடன், நான் இப்போது எனது சொந்த சமூக ஊடகப் பக்கத்தை நிர்வகிக்கிறேன், எனது தயாரிப்புகளை காட்சிப்படுத்த Facebook மற்றும் YouTube போன்ற தளங்களை மேம்படுத்துகிறேன். குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை நான் அடைந்ததால் எனது உற்பத்திற்கான பிரச்சினையை தீர்க்க இது எனக்கு உதவியது” என்று வட மாகாணத்தின் கனகராயன்குளத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் நிகழ்ச்சியின் பங்கேற்பாளருமான தர்சன் வக்சலா (32) கூறினார்.
அம்பாறை, கொழும்பு, மொனராகலை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் உள்ள பெண்கள் தலைமையிலான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இத்திட்டம் பெரிதும் துணைபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது.

