‘ராமர் கோயில் திறப்பு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தாது’ – கே.எஸ்.அழகிரி

147 0

கும்பகோணம் அருகேயுள்ள தத்துவாஞ்சேரியில் முன்னாள் எம்எல்ஏ ராமாமிர்தம் சிலையை நேற்று திறந்துவைத்த தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியது: அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படுவதற்கு எதிராக யாரும் செயல்படவில்லை. மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் கொண்டாட வேண்டியதை, பிரதமர் மோடி பதற்றத்துடன் கொண்டாட வேண்டிய காரணம் என்ன?

கோயில் திறப்பை அரசியல் ஆக்குகிறார்கள். அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டியதால், எந்த அரசியல் மாற்றமும் ஏற்படப் போவதில்லை. அசாமில்ராகுல் காந்தியின் வாகனம் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.