நாடு முழுவதும் இன்று புதன்கிழமை (24) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட “யுக்திய” நடவடிக்கையின் போது 930 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது 425 கிராம் ஹெரோயின், 235 கிராம் ஐஸ் போதைப்பொருள், 4,351 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

