உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாராளுமன்றப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (23) ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை 2 ஆம் வாசிப்பு மீதான விவாதத்துக்கு சபையில் எடுத்துக்கொள்ள வேண்டாமென எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது மக்களின் பேச்சு சுதந்திரத்தை ஒடுக்குவதாக தெரிவித்து சமூக ஆர்வலர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை சபையில் இன்று இரண்டாம் வாசிப்புக்கு எடுத்துக் கொள்வதா அல்லது ஒத்திவைப்பதா என்பது தொடர்பான வாக்கெடுப்பு 33 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 83 வாக்குகளும்,எதிராக 50 வாக்குகளும் அளிக்கப்பட்டதைத்தொடர்து சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


