அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து

88 0

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பேலியகொடை இடமாறலில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

கட்டுநாயக்க நோக்கி பயணத்துக் கொண்டிருந்த நான்கு வாகனங்கள் பணம் செலுத்தும் கருமபீடத்திற்கு அருகில் வரிசையில் நின்றபோது பின்னால் வந்த கெப் வண்டியொன்று அந்த கார்களுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதும் கார்கள் பலத்த சேதமடைந்துள்ளன.

வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் கெப் வண்டியின் சாரதியால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.