தமிழர் திருநாள் 2024-தமிழர் ஒருங்கியைப்புக் குழு- யேர்மனி.

647 0

நேற்றைய தினம் டுசில்டோர்ப் நகரத்தில் தமிழர் ஒருங்கியைப்புக் குழு யேர்மன் கிளையினரால் தமிழர் திருநாள் 2024 மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.அதன் ஒளிப்படங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

20.01.2024 சனிக்கிழமை டுசுல்டோர்வ் நகரில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் விழா கடும் குளிரில் மத்தியிலும் வெளியில் பொங்கலிட்டு கொண்டாடப்பட்டது. தொடர்ந்து மண்டப நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றல் தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடியேற்றல் அதன் பின் தளபதி கிட்டு மாமா அவர்களின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு , மலர் மாலை அணிவித்து தொடர்ந்து மண்டபத்தில் வருகை தந்திருந்த அனைவரும் சுடர் மற்றும் மலர் வணக்கம் செலுத்தினார்கள். அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் பொங்கல் நிகழ்வு தொடங்கியது நிகழ்வில் டுசுல்டோர்வ் தமிழாலய மாணவர்களின் பொங்கல்விழா தொடர்பான பேச்சுக்கள், எழுச்சிப் பாடல்கள் , எழுச்சி நடனங்கள், போன்றன நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. நிகழ்வுகள் அனைவற்றையும் தமிழாலய ஆசியர்களும் இளைய ஆசிரியர்களும் தொகுத்து வழங்கினர்.